Sunday, March 28, 2010

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்





கடந்த 27/03/10 நடந்த பதிவர் சந்திப்பு அன்று நமக்கான குழுமம் ஆரம்பிப்பதற்கான ஆலோசனை கூட்டம் பல பேரின் ஆழ்ந்த ஆலோசனைகளுக்கு பிறகு, சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்று ஒரு ஏரியாவாகவும், இணைய எழுத்தாளர் என்பதை விட வலைப்பதிவர் என்பது தனி அந்தஸ்தை கொடுக்கும் என்று பலரும் கருதியதால் சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்பதை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்று ஒரு மனதாய் தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது.

பிரபல எழுத்தாளர் ஞானி, தன்னுடய சங்க அனுபவங்களை பற்றி கூறி, நிச்சயமாய் ஒரு போரமாய் இல்லாமல் ஒரு சங்கமாய் செயல்பட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்பதை பகிர்ந்து கொண்டார். சங்கமாய் ஆரம்பிப்பது நல்லது என்றும் சொன்னார்.

இன்னும் சில பேர் இப்போதைக்கு பதிவு செய்யப்பட்ட சங்கமாய் இருப்பதை விட விர்சுவலாய் ஒரு குழுமத்தை அமைத்து அதிலிருந்து நாம் அடுத்த கட்டத்தை நோக்கி போவோம் என்று சொன்னார். அதனடிப்படையில் முதற்கட்டமாய் நம்முடைய குழுமத்தை ஆரம்பிப்போம்.தமிழில் எழுதும் உலகில் உள்ள எல்லா வலைப்பதிவர்களும் இதில் இணைந்து கொள்ளலாம்.

இணைத்துக் கொள்ள உங்களது இணைய முகவரி, மின்னஞ்சல், தொடர்புக்கான தொலைபேசி எண்கள், போன்ற விபரஙக்ளோடு நமது tamilbloggersforum@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் உடனடியாயாக உங்களுக்கான இன்விடேஷன் அனுப்பப்பட்டு இணைக்கப்படும்.

அதன் பிறகு நமது எல்லா குழும நண்பர்களூடனும் குரூப் மெயிலின் மூலம் பரிச்சயபடுத்திக் கொள்ள முடியும். இது ஒரு முதல் படியே மேலும் என்ன என்ன செய்யலாம் என்பதை பதிவர்கள் அவர்களது ஆலோசனைகளை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டு ஒன்று சேர்ந்து குழுமத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சொல்வோம் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உங்களுக்கு நமது குழுமத்திற்கான அலோசனைகளை வரவேற்க்கிறோம்.