Wednesday, August 25, 2010

கவிதை உலகம் புத்தக வெளியீட்டு விழா 28/08/10

நண்பர்களே !

வரும் ஆகஸ்ட், 28 ஆம் ( சனிக்கிழமை) அன்று
'கவிதை உலகம்' நூல்
வெளியீட்டு விழா நடைப்பெறவுள்ளது.

நூலை வெளீயிடுபவர் : திரு. கயல் தினகரன்,
தலைவர், சென்னை மாவட்ட நூலக ஆணையம்

முதல் பிரதி பெறுபவர் : திரு. அரிமா. இளங்கண்ணன்

தொகுப்பு நூலில் இடம் பெற்ற எழுத்தாளர்களுக்கு சான்றிதழை திரு.'அமுதா' பாலகிருஷ்ணன் வழங்கவிருக்கிறார்.

நேரம் : மாலை 6 மணி
இடம் :
தேவநேயப் பாவாணர் நூலகம் கட்டிடம்
சிற்றரங்கம்
LLA, அண்ணா சாலை,
சென்னை – 2

வெளியீட்டு விழாவன்று ரூ.315/- மதிப்புள்ள நாகரத்னா பதிப்பகத்தின் ஏழு நூல்கள் ரூ.250 /- விற்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு: guhankatturai.blogspot.com

Tuesday, August 17, 2010

சினிமா வியாபாரம் புத்தக வெளியீடும்... பதிவர் சந்திப்பும்


சினிமா வியாபாரம் புத்தக வெளியீடு

தேதி : 21/08/10

நேரம்: மாலை 6.00

இடம்: தக்கர் பாபா வித்யாலயா, வினோபா ஹால்
வெங்கட் நாராயணா ரோடு. தி.நகர்
அனைவரும் வருக.. ஆதரவு தருக..

Wednesday, July 21, 2010

தொலைக்கப்பட்ட தேடல்கள் புத்தக வெளியீடு.. வரும் சனிக்கிழமை.. மாலை..


புத்தக வெளியீட்டு நிகழ்வில் ரூ.100 மதிப்புள்ள ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ புத்தகம் 50 சதவிகித கழிவில் ரூ.50/-க்கு கிடைக்கும். 


மேலும், டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘நுனிப்புல்‘ சிறுகதைத் தொகுப்பு பாகம் - 1 வருகை தருகின்ற அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்.


அனைவரும் வருக !

Friday, July 16, 2010

பதிவர் விஜய மகேந்திரனின் புத்தக விமர்சனக் கூட்டம்.

"நகரத்திற்கு வெளியே விமர்சனம்,மற்றும் கலந்துரையாடல் கூட்டம் "
நாள் : ஞாயிற்றுக்கிழமை,
தேதி : 18 ஆம் தேதி
நேரம்: மாலை 5.30 மணிக்கும்
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்,
(பாண்டிச்சேரி இல்லம் அருகில்)
கே.கே. நகர் மேற்கு, சென்னை - 78.

பங்கேற்பாளர்கள்

யவனிகா ஸ்ரீராம்
அய்யப்ப மாதவன்
ரமேஷ் பிரேதன்
தாரா கணேசன்
பொன்.வாசுதேவன்
ஆர்.அபிலாஷ்
பாக்கியம் சங்கர்

அனைவரும் வருக !

நிகழ்ச்சி ஏற்பாடு : அகநாழிகை

Monday, June 28, 2010

புத்தகமாய் உங்கள் கவிதைகள்...

நாகரத்னா பதிப்பக சார்பில் 'கவிதை உலகம்' என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியிட இருக்கிறோம். படைப்புகள் அனுப்ப விரும்புவோர் nagarathna_publication@yahoo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

தலைப்பு : எழுத்தாளர் விரும்பும் தலைப்பில் எழுதலாம்

கவிதை 24 வரிக்குள் இருக்க வேண்டும். ஹைக்கூ, மரபு, புதுக்கவிதை என்று எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

கவிதைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 05/07/10

பதிவுலக நண்பர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Friday, June 18, 2010

பதிவர் டி.வி.ஆரின் புத்தக வெளியீட்டு விழா 19/06/10

பெரியவர், நண்பர் டி.வி.ஆர் என்றழைக்கப்படும், டி.வி. ராதாகிருஷ்ணன் அய்யா அவர்கள் எழுதிய “கலைஞர் என்னும் கலைஞன்” என்கிற புத்தகம் வெளியீட்டு விழா நாளை மாலை நடைபெறுகிறது. பதிவர்கள், நண்பர்கள் அனைவரும், வந்திருந்து சிறப்பிக்க வேண்டுமாறு தமிழ் வலைப்பதிவர்குழுமம் அன்புடன் அழைக்கிறது.புத்தகத்தின் பெயர்: கலைஞர் என்னும் கலைஞன்”
வெளியீட்டு தேதி : 19/06/10
வெளியீட்டு நாள் : சனிக்கிழமை
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நெ.6. முனுசாமி சாலை,
மேற்கு கே.கே.நகர்.
சென்னை.
           

Thursday, June 3, 2010

சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு 05/06/10

சென்னையில் வருகிற சனிக்கிழமை மாலை5.30 மணிக்கு, மெரீனா காந்தி சிலையருகில் 05/06/10 அன்று பதிவர் சந்திப்பு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இடம் : சென்னை மெரீனா காந்தி சிலை அருகில்

நேரம் ; 05.30 -7.30 மாலை

தேதி : 05/06/10

நாள் : சனிக்கிழமை.

சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு 05/06/10

சென்னையில் வருகிற சனிக்கிழமை மாலை5.30 மணிக்கு, மெரீனா காந்தி சிலையருகில் 05/06/10 அன்று பதிவர் சந்திப்பு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இடம் : சென்னை மெரீனா காந்தி சிலை அருகில்

நேரம் ; 05.30 -7.30 மாலை

தேதி : 05/06/10

நாள் : சனிக்கிழமை.

Sunday, March 28, 2010

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்

கடந்த 27/03/10 நடந்த பதிவர் சந்திப்பு அன்று நமக்கான குழுமம் ஆரம்பிப்பதற்கான ஆலோசனை கூட்டம் பல பேரின் ஆழ்ந்த ஆலோசனைகளுக்கு பிறகு, சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்று ஒரு ஏரியாவாகவும், இணைய எழுத்தாளர் என்பதை விட வலைப்பதிவர் என்பது தனி அந்தஸ்தை கொடுக்கும் என்று பலரும் கருதியதால் சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்பதை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்று ஒரு மனதாய் தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது.

பிரபல எழுத்தாளர் ஞானி, தன்னுடய சங்க அனுபவங்களை பற்றி கூறி, நிச்சயமாய் ஒரு போரமாய் இல்லாமல் ஒரு சங்கமாய் செயல்பட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்பதை பகிர்ந்து கொண்டார். சங்கமாய் ஆரம்பிப்பது நல்லது என்றும் சொன்னார்.

இன்னும் சில பேர் இப்போதைக்கு பதிவு செய்யப்பட்ட சங்கமாய் இருப்பதை விட விர்சுவலாய் ஒரு குழுமத்தை அமைத்து அதிலிருந்து நாம் அடுத்த கட்டத்தை நோக்கி போவோம் என்று சொன்னார். அதனடிப்படையில் முதற்கட்டமாய் நம்முடைய குழுமத்தை ஆரம்பிப்போம்.தமிழில் எழுதும் உலகில் உள்ள எல்லா வலைப்பதிவர்களும் இதில் இணைந்து கொள்ளலாம்.

இணைத்துக் கொள்ள உங்களது இணைய முகவரி, மின்னஞ்சல், தொடர்புக்கான தொலைபேசி எண்கள், போன்ற விபரஙக்ளோடு நமது tamilbloggersforum@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் உடனடியாயாக உங்களுக்கான இன்விடேஷன் அனுப்பப்பட்டு இணைக்கப்படும்.

அதன் பிறகு நமது எல்லா குழும நண்பர்களூடனும் குரூப் மெயிலின் மூலம் பரிச்சயபடுத்திக் கொள்ள முடியும். இது ஒரு முதல் படியே மேலும் என்ன என்ன செய்யலாம் என்பதை பதிவர்கள் அவர்களது ஆலோசனைகளை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டு ஒன்று சேர்ந்து குழுமத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சொல்வோம் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உங்களுக்கு நமது குழுமத்திற்கான அலோசனைகளை வரவேற்க்கிறோம்.