Sunday, March 28, 2010

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்

கடந்த 27/03/10 நடந்த பதிவர் சந்திப்பு அன்று நமக்கான குழுமம் ஆரம்பிப்பதற்கான ஆலோசனை கூட்டம் பல பேரின் ஆழ்ந்த ஆலோசனைகளுக்கு பிறகு, சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்று ஒரு ஏரியாவாகவும், இணைய எழுத்தாளர் என்பதை விட வலைப்பதிவர் என்பது தனி அந்தஸ்தை கொடுக்கும் என்று பலரும் கருதியதால் சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்பதை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்று ஒரு மனதாய் தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது.

பிரபல எழுத்தாளர் ஞானி, தன்னுடய சங்க அனுபவங்களை பற்றி கூறி, நிச்சயமாய் ஒரு போரமாய் இல்லாமல் ஒரு சங்கமாய் செயல்பட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்பதை பகிர்ந்து கொண்டார். சங்கமாய் ஆரம்பிப்பது நல்லது என்றும் சொன்னார்.

இன்னும் சில பேர் இப்போதைக்கு பதிவு செய்யப்பட்ட சங்கமாய் இருப்பதை விட விர்சுவலாய் ஒரு குழுமத்தை அமைத்து அதிலிருந்து நாம் அடுத்த கட்டத்தை நோக்கி போவோம் என்று சொன்னார். அதனடிப்படையில் முதற்கட்டமாய் நம்முடைய குழுமத்தை ஆரம்பிப்போம்.தமிழில் எழுதும் உலகில் உள்ள எல்லா வலைப்பதிவர்களும் இதில் இணைந்து கொள்ளலாம்.

இணைத்துக் கொள்ள உங்களது இணைய முகவரி, மின்னஞ்சல், தொடர்புக்கான தொலைபேசி எண்கள், போன்ற விபரஙக்ளோடு நமது tamilbloggersforum@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் உடனடியாயாக உங்களுக்கான இன்விடேஷன் அனுப்பப்பட்டு இணைக்கப்படும்.

அதன் பிறகு நமது எல்லா குழும நண்பர்களூடனும் குரூப் மெயிலின் மூலம் பரிச்சயபடுத்திக் கொள்ள முடியும். இது ஒரு முதல் படியே மேலும் என்ன என்ன செய்யலாம் என்பதை பதிவர்கள் அவர்களது ஆலோசனைகளை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டு ஒன்று சேர்ந்து குழுமத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சொல்வோம் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உங்களுக்கு நமது குழுமத்திற்கான அலோசனைகளை வரவேற்க்கிறோம்.

54 comments:

butterfly Surya said...

வாழ்த்துகள்.

க.பாலாசி said...

பணிகள் சிறப்படைய வாழ்த்துக்கள்...

Vidhoosh said...

wish the team all the best.

Sukumar Swaminathan said...

வாழ்த்துக்கள்.. இணைவோம் ..உயர்வோம்

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள்.

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

///தமிழில் எழுதும் உலகில் உள்ள எல்லா வலைப்பதிவர்களும் இதில் இணைந்து கொள்ளலாம்.///


நன்றி...! இதைதான் எதிர்பார்த்தேன்...!

நிலாரசிகன் said...

வாழ்த்துகள்.

dheva said...

Very good attempt.....and Good Thought!

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள்.

Nundhaa said...

வாழ்த்துகள்

சத்ரியன் said...

மொழியால் இணைவோம். வாழ்த்துகள்.

Sure said...

வாழ்த்துகள்

Discovery book palace said...

வாழ்த்துக்கள்

Venkat M said...

வாழ்த்துக்கள்

sriram said...

வாழ்த்துக்கள்.
ஒரு suggestion : இந்த தளத்தில் இடப்படும் ஒவ்வொரு இடுகையையும் எழுதியவர் யாரென்று குறிப்பிட்டால் நல்லா இருக்குமென்று நினைக்கிறேன்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இணைந்து சாதிப்போம்.
வாழ்த்துக்கள்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இணைந்து செயல்படுவோம் வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள்...

butterfly Surya said...

Fifty Not out..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vaazhthukkal

திரட்டி.காம் said...

வாழ்த்துகள்.

கலீல் பாகவீ said...

இணைந்து செயல்படுவோம் வாழ்த்துக்கள்

செந்தழல் ரவி said...

அலோசனைகளை

ஆலோசனைகள் என்று இருக்கவேண்டும்...!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நன்று.. இனிதே இனிக்கட்டும் இனி வரும் நாட்கள்..!

தீபிகா சரவணன் said...

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.

மயில்ராவணன் said...

வாழ்த்துக்கள்

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள்...

♠புதுவை சிவா♠ said...

வாழ்த்துக்கள்

27/03/10 நடந்த பதிவர் சந்திப்பு அன்று அனைவருக்கும் டீ , காபி, ரொட்டி, காரம் வழங்கிய நல்ல உள்ளம் உண்மைத் தமிழனுக்கு வாழ்த்துகள்.

Note : தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
Please remove comment Word verification box it is bore ya :-( thanks

gmnaidu said...

vazhthukkal,
vazhga tamil,
valarga tamilargal
G.Munuswamy,
chennai thuraimugam,
gmunu_2008@rediffmail.com

இந்திரத் தேவன் said...

நல்ல முயற்சி... நடைமுறைக்கு தேவையான முயற்சியும் கூட. நாமெல்லாம் ஒன்றுபட வேண்டும். அதுவும் நன்றுபட வேண்டும். அகச் செறுக்கு அறுத்தால் யுகச் சிறப்பு காணலாம். வலிமையான உறவு கிளைக்க வாழ்த்துக்கள்.

அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துக்கள்

இராமசாமி கண்ணண் said...

வாழ்த்துக்கள். மகிழ்ச்சி.

princerajan C.T said...

மகிழ்ச்சி

தாராபுரத்தான் said...

வருக..வாழ்க...

sivaperianan said...

வாழ்த்துக்கள். Feel free to visit www.vallinam.com.my - a magazine for arts n literature

Yuva said...

இணை(ய)வோம்... இயற்றுவோம்... இவ்வையகம் பயனுறவே!

http://yuva-theprince.blogspot.com/

LOSHAN said...

வாழ்த்துக்கள்

மேமன்கவி பக்கம் said...

நல்ல முயற்சி எல்லோரும் இணைவோம். வாழ்த்துக்ளும் பாராட்டுக்களும்

ஆதிமூலகிருஷ்ணன் said...

அன்பு நண்பர்களே,

பிற கருத்து வேறுபாடுகள் ஒரு பக்கமிருக்கட்டும். ஒரு முக்கிய விஷயத்தைக்கூற விரும்புகிறேன்.

ஊடகங்கள் உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட பதிவரின் பதிவுகளில் பிழைகள் இருப்பின் அது அவரோடு போய்விடும். ஆனால் இப்படியான பொதுவான இடுகைகளில் இலக்கணப்பிழைகள், எழுத்துப்பிழைகள் உலகம் எள்ள வாய்ப்பாக அமைந்துவிடும். தயவு கூர்ந்து பிழைகளைத் தவிருங்கள், இந்தப்பதிவிலும்.. இனி வரும் பதிவுகளிலும்.

நன்றி.

கிருஷ்ணமூர்த்தி said...

முயற்சி திருவினையாக்கும்!

மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்த பதிவர்களையும், மறுபடி சந்தித்து மனம் விட்டுப் பேசி, ஒருங்கிணைந்து செயல்பட முயற்சி செய்து பாருங்கள்! அவர்கள் முன்வந்தாலும், முன்வரவில்லை என்றாலும், இன்னொரு முயற்சி, ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதற்காகச் செய்யப் படுவதில் தவறே இல்லை.

தனிப்பட்ட முறையில், வலைப்பதிவர்கள் குழுமம், சங்கம் என்பதில் எனக்கு ஆர்வமில்லை. வலைப்பதிவர்கள் எல்லோருமே சிடிசன் ஜார்னலிஸ்ட் ஆகிவிடவோ, பத்திரிகையாளர்கள் போல சங்கம் அமைத்துக் கொள்வதோ, அதை அரசு அங்கீகரிப்பது என்பதோ சாத்தியமில்லை. அரசு அங்கீகாரத்தை வலியத் தேடிப் போனால், மகளிர் சுய உதவிக் குழுக்களைப் பயன்படுத்திக் கொள்வதைப் போல, அரசும் தனக்கு ஜால்ரா தட்டுகிற ஒரு அமைப்பாகவோ, அல்லது நடிகர் சங்கம் மாதிரிப் பாராட்டுவிழா நடத்துவதே ஒரு தொழிலாக வைத்திருப்பது போல ஆகிவிடும் என்பது என்னுடைய கருத்து.

அதே நேரம், ஒரு முயற்சி தொடங்குவதற்குத் தடையாக இருப்பதிலோ, அல்லது அப்படி ஒரு முயற்சி வேண்டாமென்று சொல்வதிலோ, முயற்சியைத் தொடங்கியவர்களுக்கு ஒரு சாயம், உள்நோக்கங்களைக் கற்பிப்பதிலோ எனக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை.

பதிவில் சொல்லப் பட்டிருப்பதைப் போல, முதலில் இந்த மின்வெளியில் ஒத்திசைந்து செயல்படுகிற ஒரு குழுமமாகச் செயல் படுவோம், படிப்படியாக அடுத்த கட்டத்தை அனுபவங்களப் பொறுத்து முடிவு செய்வோம் என்பதில் முழுதும் உடன்படுகிறேன்.

SanjaiGandhi™ said...

//சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்பதை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்று ஒரு மனதாய் தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது.//

தலைப்பிலும் லோகோவிலும் சென்னை என்ற வார்த்தை இல்லையே.. கவனப் பிழையா? அல்லது ஒட்டு மொத்த தமிழ் பதிவர்களுக்கும் இது தான் குழுமமா?

கவனப் பிழை என்றால் கீழ்காணும் வரிகளை கண்டுகொள்ள வேண்டாம்..

ஒட்டு மொத்த தமிழ்ப் பதிவர்களுக்கும் என்றால், சென்னைப் பதிவர்கள் எப்போது அனைவருக்குமான அத்தாரிட்டிகளானார்கள்?

சென்னைப் பதிவர்களுக்கான குழுமம் மட்டுமே என்றால் அது அவர்கள் விவகாரம்.. சக பதிவனாய் வாழ்த்துகள்..

Vijis Kitchen said...

வாழ்த்துக்கள்.நல்லமுயற்ச்சியயை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நற் பயனுள்ளதாக்குவோம்.

யுவகிருஷ்ணா said...

தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் என்ற வலைப்பூ, கேபிள்சங்கர் என்பவரை மட்டும் ஃபாலோ செய்வதை நான் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறேன் :-)

Cable Sankar said...

//தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் என்ற வலைப்பூ, கேபிள்சங்கர் என்பவரை மட்டும் ஃபாலோ செய்வதை நான் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறேன் :-)//

ஏன்னா அது நான் கிரியேட் பண்ண ஐடி அது என்னை மட்டும்தான் பாலோ பண்ணும்..:)

Baby ஆனந்தன் said...

வாழ்த்துக்கள். எனது விபரங்களை அனுப்பிவிட்டேன்.

DR.KVM said...

best wishes

பார்வையாளன் said...

proof readers யும், பத்திரிகையாளர் என அங்கீகரித்து உள்ளனர்..
அதே போல, பின்னூட்டம் மட்டும் இடுவோர், குறைகள் மட்டும் சுட்டி காட்டி எழுதுவோரையும், வலை பதிவர் என அங்கீகரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்... அவர்களுக்கும இன்விடேஷன் அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்ற படும் என நம்புகிறேன்.. அதே போல அனைவருக்கும் , உறுப்பினர் அட்டை வழங்கினால், சிலரை மிரட்ட வசதியாக இருக்கும்... ( எதாவது கார்டை காட்டினாலேயே, நம்ம ஆட்கள் சற்று மிரள்வார்கள் )

thamilmagal said...

உங்களோடு கைகோர்த்து இணைகிறோம். வாழ்க! வள்ர்க!!

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்...

தோழி said...

வாழ்த்துக்கள்...

மதன்செந்தில் said...

வாழ்த்துக்கள்..


www.narumugai.com

சென்னைத்தமிழன் said...

வாழ்த்துகள். word verification ஐ நீக்கிவிடுங்கள். சங்கர்.

BIGLE ! பிகில் said...

இன்விடேசனுக்கு மெயில் அனுப்பியிருக்கேன் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துக்கள்.நல்லமுயற்சி.

Post a Comment