Tuesday, March 1, 2011

சென்னைத் தமிழ் பதிவர்கள் குழுமம்.

அன்பார்ந்த தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தினருக்கு வணக்கங்கள். சென்னையில் உள்ள பதிவர்களுக்காக ஒரு குழும நடவடிக்கைகளை செயல் படுத்த, பதிவர்கள் அனைவரும் விருப்பம் தெரிவித்த காரணத்தால், அதன் செயல்பாடுகள் குறித்த உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம். நன்றி.

16 comments:

ரவி said...

செய்ங்க...

ரவி said...

ஆனா வேர்ட் வெரிபிக்கேஷன் எடுத்துட்டு செய்ங்க..

மாணவன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

எல் கே said...

ஒழுங்கா பண்ணுங்க

நிரூபன் said...

வாழ்த்துக்கள். கலக்குங்கோ.

சக்தி கல்வி மையம் said...

ஒரு முடிவை சீக்கிரம் எடுங்க...

கௌதமன் said...

Our best wishes.

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துகள்!

Unknown said...

வாழ்த்துக்கள்..

அடடா said...

வாழ்த்துக்கள்..

Perungulam Ramakrishnan Josiyar said...

அனைவருக்கும் வணக்கம். என்னையும் சேர்த்துக்கோங்க. நானும் இணைந்து விடுகிறேன்,

r.v.saravanan said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

R. Gopi said...

KRP செந்திலின் பதிவில் போட்ட பின்னூட்டத்தை இங்கேயும் பதிவு செய்கிறேன்.

வாழ்த்துகள்.

இந்தப் பின்னூட்டம் யாருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ எழுதப்படுவது அன்று. என் மனதில் பட்டதை சொல்கிறேன். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது தெரிந்திருந்தாலும் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறேன்.

‘on the fly’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அது போல போகப் போக ஒவ்வொன்றாக சரிசெய்து கொள்ளலாம். வேண்டிய விஷயங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். வேண்டாதவற்றை விட்டுவிடலாம். மோகன்குமாரின் பின்னூட்டத்தைத்தான் நான் பிரதிபலிக்கிறேன்.

சனி மாலை ஆறு மணி என்பது நல்ல தேர்வாகப் படுகிறது. மற்ற நாட்கள் என்றால் நிச்சயம் சிரமம்தான்.

சர்வதேசப் படங்கள் காண்பிக்கும் திட்டமும் சரி. தமிழிலும் நல்ல படங்கள் உள்ளன. இந்தியாவின் பிற மொழிகளிலும் நல்ல படங்கள் உள்ளன. அவற்றையும் திரையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வெறுமனே படத்தைப் பார்த்துவிட்டுக் கலைந்து செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது குறித்த புரிதல்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும்.

சர்வதேசப் படங்கள் என்ற போர்வையில் ஆபாசம், வன்முறைக் காட்சிகள் நிறைய இருக்கும் படங்களைத் திரையிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. எந்தப் படம் திரையிடப் படப்போகிறது என்பது கண்டிப்பாக moderate செய்யப்பட வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை கீழ்க்கண்ட விஷயங்கள் அடுத்தடுத்த பதிவர் சந்திப்புகளில் விவாதிக்கப்பட வேண்டும்:

பதிவர்களுக்கான code of conduct. இது குறித்த தீர்மானம் நிறைவேறினாலே பதிவுலகில் நடைபெறும் பாதி அடிதடி குறைந்துவிடும்.

பதிவர் சந்திப்பு குறித்த அழைப்புகள். நீங்கள் ஒரு திரைப்பட இயக்குநரைக் கூப்பிட்டு வைத்துப் பேசப் போகிறீர்கள் என்றால் அதைத் தனியாக நடத்துங்கள். பதிவர் சந்திப்பையும் அதையும் கலக்க வேண்டாம். மேலும் ஒரு சந்திப்பு என்பது வாசகர்கள், பதிவர்கள் என அனைவரும் வரக்கூடிய ஒரு நிகழ்வு. சந்திப்புகளில் minimum decorum மீறப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரட்டைக் கச்சேரிகளை \ பிற சேட்டைகளை அந்தச் சந்திப்பிற்கு வெளியில் வைத்துக்கொள்ளலாம்.

இதுவரை திரைப்படங்களாக வந்த நாவல்கள், அவற்றின் குறை நிறைகள்.

அம்பேத்கர் (சமூகம்), மகிழ்ச்சி (நல்ல நாவல்களை அடிப்படையாக் கொண்ட படங்கள்) போன்ற படங்களின் விமர்சனம் (படம் நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்) தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் நிச்சயம் வரவேண்டும். நல்ல நாவல்கள் திரைப்படமாவதில்லை என்று நாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் வந்த படங்களை விமர்சிக்க வசதியாக மறந்துவிடுகிறோம்.

குழுமத்தின் முக்கிய நோக்கம் என்ன என்பது இதுவரை என்னவென்று தெரியவில்லை. பாதகமில்லை. பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம். ஆனால் சீக்கிரம் நோக்கம் என்னவென்று சொல்லிவிட்டால் நல்லது. பலரும் இது குறித்துக் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர் அல்லவா? என்னைப் பொறுத்தவரை ஒரு காரியத்தைக் தனியாகச் செய்வதை விடக் கூட்டாகச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்றால் மட்டுமே குழுமம் தேவைப்படுகிறது. என்னால் ஒரு திரைப்படம் தனியாகப் பார்க்கமுடியும். ஆனால் அது குறித்து விவாதிக்க ஒரு குழு தேவைப்படுகிறது.

தமிழில் வெளிவந்த நல்ல நாவல்கள் விவாதிக்கப்பட வேண்டும்.

குழுமத்தின் வலைப்பதிவில் எல்லாப் பதிவர்களின் நூல் வெளியீடு விழா குறித்த விவரங்கள் பதிவாக வரவேண்டும்.

எழுத்தாளர்களுக்கு விருது (உதாரணம் நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாடெமி விருது கிடைத்தது குறித்து) கிடைக்கும்போது குழுமம் சார்பாக அந்த எழுத்தாளரைக் கவுரவிக்க வேண்டும். குறைந்தபட்சம் அது குறித்த பதிவுகள் குழுமத்தின் வலைப்பதிவில் இடம்பெற வேண்டும்.

#tnfisherman சம்பந்தமான பதிவுகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். இதுபோன்ற வேறு சமூக அக்கறை கொண்ட பதிவுகளும் நிச்சயம் இடம்பெற வேண்டும். இது குறித்துப் பதிவர்கள் என்ன செய்யலாம் என்பது விவாதிக்கப்பட வேண்டும்.

இப்போதைக்குத் தோன்றுபவை இவை மட்டுமே. மேலும் ஏதேனும் தோன்றினால் பகிர்ந்து கொள்கிறேன்.

மீண்டும் வாழ்த்துகள்.

குறிப்பு: குழுமம் பின்தொடரும் ஒரே பதிவர் கேபிள் சங்கர். குழும வலைப்பதிவு யாரையும் பின்தொடரவேண்டாம் என்பது என் எண்ணம். கேபிள் சங்கருக்கு ஒரு பின்தொடர்பவர் குறைவதால் பெரிய நஷ்டம் ஏற்பட்டு விடப்போவதில்லை என்று நினைக்கிறேன்:-)

தனி காட்டு ராஜா said...

சென்னை-க்காக இதை நடை முறைபடுத்த முயற்சி செய்யுமாறு சென்னை பதிவர் குழுமத்துக்கு வேண்டுகோள்....

ரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) said...

நல்ல சிந்தனை..

வாழ்த்துக்கள்...நண்பர்களே..

வலைப்பதிவர்களின் சமுதாயத்தில் நானும் ஒருவன் என்பதை நினைத்து மிக்க மகிழ்வடைகின்றேன்.

தொடருங்கள் சேவையை..

VOICE OF INDIAN said...

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பர்களாய் இருப்பபவர்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கிட வேண்டாமே தோழர்களே!
என்ன சரியா ?

கிட்சுக்கே வெறிபிடித்து அலையும் நபர்களும் இருக்கின்றார்கள் அவர்கள்...................? ஜாக்கிரதை

நல்ல முயற்சி கூடுதல் நல்ல செயலுக்காக நல்ல நோக்கத்திற்காக இருந்தால் நலம்

Post a Comment